Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒன்றிணைவோம் வா" திட்டத்துக்கு நன்கொடை கொடுத்தவரின் நிலத்தையே ஆட்டைய போட்ட தி.மு.க!

"ஒன்றிணைவோம் வா" திட்டத்துக்கு நன்கொடை கொடுத்தவரின் நிலத்தையே ஆட்டைய போட்ட தி.மு.க!

ஒன்றிணைவோம் வா திட்டத்துக்கு நன்கொடை கொடுத்தவரின் நிலத்தையே ஆட்டைய போட்ட தி.மு.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 3:59 AM GMT

ஆக்கிரமிப்புக்கு பெயர்‌ போன தி.மு.க-வின் ஆட்டம் ஆட்சியில் இல்லாத போது கூட அடங்கவில்லை. ஒன்றே 'குலம்' என்பதற்கு பதிலாக ஒன்றே 'குளம்' என்று அறிக்கை வெளியிட்டு கொரோனா வந்தாலும் ப்ளேக் வந்தாலும் எங்கள் கண்ணெல்லாம் குளம், ஏரி என்று நில ஆக்கிரமிப்பில் தான் இருக்கும்‌ என்பது போல் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து சமூக ஊடகங்களில் அல்லோல கல்லோலப் படுகின்றனர்.

ஒன்றிணைவோம் வா, உதவி செய்வோம்‌ வா என்று 2021 சட்டசபைத் தேர்தலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அச்சாரம் போட முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது ஆசையில் மண் அள்ளிப் போடவென்றே இருக்கிறார்கள் உள்ளூர் தி.மு.க நிலச்சுவான்தார்கள்.

தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த கணியம்பூண்டி செந்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவலில் திருப்பூரில் நடக்கும் தி.மு‌.க பிரமுகரின் அராஜகத்தைப் பற்றி கூறியுள்ளார். அவரது உறவினர் பழனிச்சாமி என்பவர் ஒரு வாட்ஸாப் குழுவில் பதிவிட்ட செய்தியை அவரது அனுமதியுடன் பதிவிடுவதாகக் கூறி மற்றுமொரு தி.மு.கழக நில அபகரிப்பு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த தகவல் பின்வருமாறு,

'இந்த குரூப்ல இருக்கும் DMK நண்பர்களுக்கு எனது கனிவான வணக்கம்.,

எனது பெயர் N.பழனிசாமி (s/o.து. கா. நட்ராஜ்)..திருப்பூர் - காந்திநகரில் வசிக்கிறேன் (எனது குடும்பத்தினுடன்). எனது சொந்த ஊர் - அவிநாசி அருகில் உள்ள கிராமம் - துலக்கமுத்தூர். நான் எனது கடின உழைப்பில் - திருப்பூர் - அவிநாசி ரோடு - பெரியார் காலனி ல் இடம் வாங்கினேன். இப்போது அது DMK பிரமுகர் - கொ.ராமதாஸ் (திருப்பூர்-15 வேலம்பாளையம் - DMK பகுதி செயலாளர்)ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இவரின் அராஜக போக்கினால் - ராமதாஸின் ரவுடி தனத்தை அஞ்சி என்னுடைய இடத்துக்கு உள்ளே நுழைய முடியவில்லை.ரவுடி ஆட்கள் வைத்து எனது இடத்துக்கு நான் உள்ளே நுழையவே தடுக்கிறார். குறிப்பு :

எனது தந்தை து. கா. நட்ராஜ் - தீவிர காங்கிரஸ் காரர்.

எனது மனைவியின் தாத்தா - முன்னாள் அவிநாசி MLA - காலம் சென்ற மாரப்பக் கவுண்டர் ஆவார்.

நான் இப்போது சமீபத்தில் - DMK தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த - ஒன்று இணைவோம் வா திட்டத்துக்கு - எனது கிராம DMK கிளைக்கு - ரூ10000 நன்கொடை கொடுத்தேன். எனது கிராமம் DMK கிளை நிர்வாகிகளும் -மாவட்ட நிர்வாகமிடம் சொல்லியும் - யாரும் கண்டுகொள்ளவில்லை.

இப்போது எனது வேண்டுகோள்-நான் அனுப்பிய இந்த பதிவை - DMK தலைவர் @mkstalin வரை செல்ல forward செய்து - ராமதாஸ் போன்ற ஆட்கள் தண்டிக்க உதவி செய்யுமாறு கேட்கிறேன்." இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம் என்பது போல் தான் இருக்கிறது இந்த சம்பவம். உதவி செய்தவரிடமே அடித்துப் பிடுங்குவது தான் தி.மு.கவினரின் பழக்கம்.

முரசொலி அலுவலகத்துக்கே மூலப் பத்திரம் காட்டாத ஸ்டாலினா இவரது நிலம் திரும்பிக் கிடைக்க உதவப் போகிறார்.‌ எனினும் தமிழக வாக்காளர்களுக்கு தி.மு.கவின் உண்மை முகத்தை காட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Next Story