Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லையா? - இதுதான் காரணம்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லையா? - இதுதான் காரணம்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லையா? -  இதுதான் காரணம்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 11:56 AM GMT

காலங்கள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் நம்பர்1 ஆக வலம் வருபவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. இவர் அசாத்திய நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் மக்கள் மனதை வென்றவர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா எழுதி இயக்குகிறார். டி இமான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் தீம் வெளியாகி வைரல் ஆனது.

இன்னிலையில் அண்ணாத்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கலாம் என்ற நிலையில் உள்ளபோது ரஜினிகாந்த் சில காட்சிகளை நீக்க சொல்லி கூறியுள்ளார். அது என்னவென்றால் படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் வரும் அது வேண்டாம் என கூறியுள்ளாராம். இது இயக்குனர் சிவாவிற்கு மிகவும் வருத்தத்தை தந்துள்ளது.

சண்டைக் கலைஞர்களை தொட்டு நடித்தால் தனக்கு கொரனா பாதிப்பு வந்துவிடுமோ என அச்சப்படுகிறாராம் சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் ரஜினிகாந்தின் மிகப்பிரபலமான சண்டைக்காட்சிகள் இல்லை என்றால் படத்தில் ஒன்றுமே இருக்காது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி மற்றும் குழுவினர் பிரபல யூடியூப் சேனலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News