Kathir News
Begin typing your search above and press return to search.

தீயணைப்புப் பணியில் குறுகிய கால படிப்புக்கான சேர்க்கைப் பணியைத் தொடங்கியது - ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்.!

தீயணைப்புப் பணியில் குறுகிய கால படிப்புக்கான சேர்க்கைப் பணியைத் தொடங்கியது - ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்.!

தீயணைப்புப் பணியில் குறுகிய கால படிப்புக்கான சேர்க்கைப் பணியைத் தொடங்கியது - ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 12:05 PM GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் இயங்கிவரும் இந்தியாவின் ஒரே தேசிய பல்கலைக்கழகமான, ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் (ஆர்ஜிஎன்ஏயூ), தீயணைப்பு - அடிப்படை தீயணைப்பு படிப்புக்கான பாடநெறியில் தனது தொழிற்பயிற்சிக்கு சேர்க்கை செயல்முறையைத் தொடங்குவது குறித்து அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள், இந்தத் திட்டத்தில் சேருவதற்கான இசைவை gmraa.contact@gmrgroup.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகத்தின் செயல்முறை துணைவேந்தர் அம்பர் துபே கூறுகையில், "தீயணைப்பு வீரர்கள் விமானத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். நாடு முழுவதும் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுவருதால், பயிற்சி பெற்ற வல்லுனர்களுக்கான தேவை அதிகரிக்கும். எங்கள் பாடத்திட்டத்தின் மூலம், இந்தத் துறையில் எதிர்கால தேவையை நிறைவு செய்யும் வகையில் திறமையான நிபுணர்களை நாங்கள் தயார்படுத்துகிறோம்"

அடிப்படை தீயணைப்பு வீரர்களுக்கான பாடத்திட்டம் என்பது தீயணைப்பு வீரராக தங்கள் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கான, 6 மாத கால சான்றிதழ் திட்டமாகும். இந்த பாடத்திட்டம் ஜி.எம்.ஆர் ஏவியேஷன் அகாடெமியுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட உலகத்தரத்திலான வகுப்பறைகள், நூலகம் மற்றும் விடுதிகளைக் கொண்ட பயிற்சி மையத்தில் இந்தப் பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. பாடத்திட்டத்தின் போது, மாணவர்களுக்கு, நிஜ வாழ்க்கையின் அனுபவத்தை வழங்கும் வகையில் தீ அணைப்புப் பயிற்சி குறித்து செயலில் உள்ள ஓடுபாதையில் நிபுணர்களால் நேரடிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உண்மையான பணி நிலைமைகள் குறித்து, நேரடியாகக் கிடைத்த நுண்ணறிவுத் தகவல்களை வழங்கும் வகையில், விமானிகளாக பயிற்சிபெறும் மாணவர்கள், விமான நிலைய செயல்பாட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னணி விமான நிலைய ஆபரேட்டர்களுடன், வளாக வேலைவாய்ப்புக்கான வசதியையும் இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

தகுதி: உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தகுதியான ஆண் அல்லது பெண் விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10 + 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சேர்க்கை செயல்முறைக்கு விண்ணப்பிக்க முடியும்.

பெண் விண்ணப்பதாரரின் உயரம் 157 செ.மீ-க்கும் அதிகமாகவும்,. ஆண் விண்ணப்பதாரரின் உயரம் 165 செ.மீ–க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இலகு ரக / கனரக மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; ஆங்கிலத்தில் சிறந்த புரிதலும் இருக்க வேண்டும்.

தற்போதைய பாடத்திட்டம் 17 ஆகஸ்ட் 2020 முதல், 14 பிப்ரவரி 2021 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News