Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்தை உடலில் பரிசோதனை செய்வதற்கு முன் வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் - குவியும் பாராட்டு.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்தை உடலில் பரிசோதனை செய்வதற்கு முன் வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் - குவியும் பாராட்டு.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்தை உடலில் பரிசோதனை செய்வதற்கு முன் வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் - குவியும் பாராட்டு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 July 2020 12:27 PM GMT

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் முதல் தடுப்பூசி மருந்தை வெற்றிகரமாக தயாரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் சேர்ந்து ‛கோவேக்சின்' என்கிற தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனையை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றுள்ளது. தற்போது பரிசோதனை பணிகள் ஒரிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனையில் நேற்று ஆரம்பித்தது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள துர்காபூரை சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார். இவர் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை எடுக்கப் போகும் முதல் நபர். பின்னர் வரும் நாளில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டி பாடிக்களை உருவாக்கும் ஆண்டிஜனை எடுப்பதற்கு சிரஞ்சித் ஒடிசா செல்ல உள்ளார் என கூறப்படுகிறது

சிரஞ்சித் திபார் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதனையை பல வடிவங்களில் செய்வதற்கு தாமாக முன் வந்துள்ளார். இதனைப் பற்றி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியது: நான் ஆர்.எஸ்.எஸ் கொள்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை பரிசோதனை செய்வதற்கு என்னுடைய உடலை நம் நாட்டிற்காக தானம் செய்ய இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமே இந்த பரிசோதனைக்காக திபார் விண்ணப்பித்தார் என தகவல் கூறப்படுகிறது. மேலும், கடந்த 5 ஆம் தேதி பாட்னா ஐ.சி.எம்.ஆர் மையம் மருத்துவ பரிசோதனைக்காக திபாரை தேர்வு செய்துள்ளனர்.

Next Story