Begin typing your search above and press return to search.
அயோத்தியில் ராமர் கோவில்: ராம ஜென்ம பூமிக்கு சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்தார் பிரதமர் மோடி.!
அயோத்தியில் ராமர் கோவில்: ராம ஜென்ம பூமிக்கு சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்தார் பிரதமர் மோடி.!
By : Kathir Webdesk
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டுகிறார். இந்த விழாவுக்கு 175 பேரை அழைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய பிரதமர் மோடி லக்னோவுக்கு வந்த பின்பு ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்தடைந்தார். இதன் பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனை வழிபாடு செய்தார். ராமனின் காவலரான அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார்.
தற்போது ராம ஜென்ம பூமிக்கு சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்தார் பிரதமர் மோடி.
மேலும், அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கலை பிற்பகல் 12.40 மணியளவில் பிரதமர் மோடி நாட்டுகிறார்.
Next Story