Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விக்ரம் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்.!

நடிகர் விக்ரம் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்.!

நடிகர் விக்ரம் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 10:24 AM GMT

தமிழ்சினிமாவில் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்து இருப்பவர் நடிகர் ஸ்ரீமன்.புதிய மன்னர்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமிழ் சினிமா சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துவரும் ஸ்ரீமன் அவ்வப்போது வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,விக்ரம், ரஜினிகாந்த்,கமல்,விஜயகாந்த் ஆகியோருடனும் நடித்திருக்கிறார்.

இவர் சேது,நெஞ்சினிலே,போக்கிரி, பஞ்சதந்திரம்,காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து அவருக்கென ஒரு தனி திறமை காட்டி இருப்பவர். இந்நிலையில் இவர் ஸ்கெட்ச் படத்தில் நடிகர் விக்ரமுடன் நடித்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.மேலும் இவர் விக்ரம் குறித்து சில தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

சியான் விக்ரம் உடன் பணியாற்றிய நினைவுகள் பற்றியும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என் அன்பான சகோதரர் சியான் விக்ரம் உடன் ஸ்கெட்ச் படத்தில் மறக்க முடியாத ஒரு ரோல் செய்து இருந்தேன். அவருடன் நடித்ததில் படத்தில் நடிக்க சிறு நுணுக்கங்களையும் கற்று தந்தார் என்று பதிவிட்டிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News