Kathir News
Begin typing your search above and press return to search.

ரியல் ஹீரோ "சோனு சூட்"- பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.!

ரியல் ஹீரோ "சோனு சூட்"- பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.!

ரியல் ஹீரோ சோனு சூட்- பாமக நிறுவனர் ராமதாஸ்  பாராட்டியுள்ளார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 12:07 PM GMT

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மிக உயர்ந்த நல்ல உள்ளம் கொண்டவர் இந்தி நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இவர் செய்த உதவிகள் அடுத்தடுத்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே உள்ளன.

இவர் செய்த உதவிகள் பன்னாட்டு நிறுவனத்தினால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். சாரதா என்ற பெண்ணுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தன் சொந்த இரு மகள்களை வைத்து ஏரில் பூட்டி ஒரு விவசாயி உழுது வந்தார் அவருக்கு சொந்தமாக ஒரு டிராக்டரை வாங்கி கொடுத்தார். மேற்குவங்காளத்தில் மழையினால் வீடு இழந்த ஒரு பெண்ணுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்களித்து இருக்கிறார்.ஊரடங்கின் போது இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல பஸ், விமானம், ரயில் ஆகியவை அமைத்துக் கொடுத்தார்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 90 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக மாஸ்கோ விற்கு சென்று படித்துள்ளனர் அவர்களை சோனு சூட் தனி விமானம் அமைத்துக் கொடுத்து சென்னை வர உதவி செய்தார். இவர் செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளனர். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ரியல் ஹீரோ சோனு சூட்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

இவர் கூறியது மாஸ்கோவில் தவித்த 100- க்கு மேற்பட்ட மருத்துவப் படிப்பிற்காக சென்ற மாணவர்களை அழைத்து வர "இந்தி நடிகர் சோனு சூட்" அவரது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் தொடர் சேவை வியக்கவைக்கிறது என பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Next Story