Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோயிலுக்காக வாதாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் பராசரன்.!

அயோத்தியில் ராமர் கோயிலுக்காக வாதாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் பராசரன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 2:22 AM GMT

ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களுக்குத் துணையாக சட்ட வழியில் போராடிய 92 வயது K பராசரன், பூமி பூஜையைத் தனது இல்லத்தில் கண்டுகளித்தார். இவர் வழக்கறிஞரும், இந்து தரப்பினருக்கும் தலைமை ஆலோசகராக பணியாற்றினார்.



K பராசரன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், 1983 முதல் 1989 வரை அட்டனி ஜெனெரலாகவும், 1976இல் தமிழ்நாட்டின் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.2003 மற்றும் 2011இல் பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதை பெற்றவர். 2012இல் ஜனாதிபதியால் ஆறு வருடம் ராஜ்ய சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சட்டமைப்பு மற்றும் பண்டைய வரலாறு குறித்த அவரது கருத்துக்கள் மூத்த வழக்கறிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் வழக்கில் கோவிலின் நிருவகத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதில் பிரிவு 25(2)(பி) கீழ், பெண்கள் பாதுகாக்கப்படுவதில்லை, இது சாதிப் பிரிவினையே ஆகும். கோவிலை மற்றப்பிரிவினர்களுக்கு திறக்க மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது, இதில் பெண்களை உட்படுத்தக்கூடாது என்று வாதாடினார்.

ராமர் கோவில்- பாபர் மசூதி உச்சநீதிமன்ற வழக்கில் இவர் இந்துக்களுக்கு ஆதரவாக வாதாடினார். விசாரணையில் ஒவ்வொரு நாளும் அவரது பணியை அர்ப்பணித்து அறியமுடிகிறது.

"V யோகேஸ்வரன், அனிருத் சர்மா, ஸ்ரீதர் பொட்டராஜு, அதிதி தானி, அஷ்வின் குமார் மற்றும் பக்தி வர்தன் சிங்க்" முதலியோர் உதவியில் வாதாடினார். ஒவ்வொரு முறை அவர் வாதாடும் போதும் அவர் தன் நிதானத்தை இழக்கவில்லை என்பது வழக்கின் இறுதி நாளில் தவானுக்கு காத்திருந்தது மூலம் தெரிகிறது.

வழக்கின் வாதங்கள் போது, 433 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறப்பிடத்தில் ஒரு மசூதியைக் கட்டியது சட்டவிரோதமாகும், அதைச் சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.


source:https://swarajyamag.com/insta/legendary-lawyer-k-parasaran-who-successfully-led-the-hindu-legal-fight-for-ram-mandir

Next Story
கதிர் தொகுப்பு
Trending News