Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் பாதித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் உடல்நிலை பற்றி மருத்துவமனை தகவல்.!

கொரோனாவால் பாதித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் உடல்நிலை பற்றி மருத்துவமனை தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 6:02 AM GMT

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் உடல்நிலை சீராக இருக்கிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.



நேற்று இரவு கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மற்றும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் போன்றோர் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து உள்ளனர். இதனால் அவர்களையும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர்.

Next Story