Kathir News
Begin typing your search above and press return to search.

கொரானா காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான்.!

கொரானா காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான்.!

கொரானா காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 11:02 AM GMT

அமேசான் நிறுவனம் தனது 26 ஆண்டுக் கால ஆன்லைன் விற்பனை வரலாற்றில், முதல் முறையாக 5.2 பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளது, தனது இரண்டாம் காலாண்டு வருவாயில் திகைக்க வைக்கும் 40 சதவீதத்தை அதிகரித்து மொத்த வருமானம் 88.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்று வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக, சமூக விலகல் வலியுறுத்தப்படுவதால் அரசாங்கம், செங்கல், மோட்டார் விற்பனை மற்றும் பல கடை விற்பனையாளர்களுக்கு நேரடி விற்பனைக்கு தடைவிதித்த போது, அமேசான் நிறுவனத்தின் தேவை காரணமாக விற்பனையில் அதிக வருவாய் ஈட்டியது. அந்நிறுவனம் கிடங்குகள் சுத்தம் செய்வது, 175,000 புதிய ஊழியர்களைப் பணி அமர்த்துவது, தற்போது இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது போன்ற செலவுகளுக்கு $ 4 பில்லியனை செலவழித்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் $45.9 பில்லியன் அதிகரித்துள்ளது. விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை சென்று சேரவும், தங்களது விற்பனையை அதிகரிக்கவும் அமேசான் நிறுவனத்திற்கு பணம் செலுத்தியதன் விளைவாக விற்பனையாளர் சேவை 41 சதவீதமும், மற்றும் விளம்பரம், மற்றவை மூலம் வரும் வருமானம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் அலுவலகங்களாக மாற்றிய நிலையில் அமேசான் வெப் சேவை (AWS) தனது வருவாயை 29 சதவீதம் உயர்ந்து 10.81 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது.

நடப்பு காலாண்டில் அதன் வருமானம் 87 பில்லியன் டாலர் முதல் 93 பில்லியன் டாலராக உள்ளதெனன்றும், இயக்க வருமானம் 2 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலராக உள்ளது என அந்நிறுவனம் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் காலாண்டின் இறுதியில் தனது பணியாளர்களை 34 சதவீதம் உயர்த்தி 876,800 முழுநேர & பகுதி நேர பணியாளர்களாக உள்ளனர். கொரானா காலத்தில் தேவைகளைப் பூர்த்திசெய்ய இவ்வாண்டின் இறுதியில் 175,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாகவும் அவர்களுக்குத் தற்காலிக ஊதிய உயர்வு வழங்குவதாகவும் அமேசான் அறிவித்துள்ளது.


source: https://swarajyamag.com/insta/amazon-reaps-a-pandemic-windfall-posts-biggest-profit-in-its-26-year-history

Next Story