Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் பூமி பூஜைக்கு பிறகு ராஜா சுஹால்தேவ் பற்றி கூறிய பிரதமர் மோடி.!

அயோத்தியில் பூமி பூஜைக்கு பிறகு ராஜா சுஹால்தேவ் பற்றி கூறிய பிரதமர் மோடி.!

அயோத்தியில் பூமி பூஜைக்கு பிறகு ராஜா சுஹால்தேவ் பற்றி கூறிய பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 11:57 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் தனது உரையின் போது ராஜா சுஹால்தேவ் குறித்து ஒரு குறிப்பை வெளியிட்டார்.

எப்படி வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களை விரட்டுவதில் ராஜா சுஹால்தேவை ஆதரிக்க ஏழைகளும்,பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து உதவி செய்தார்களோ அதேபோல் இந்திய மக்கள் அனைவரின் உதவியுடன் ராமர் கோவில் கட்டப்படும் என்று மோடி கூறினார்.

ராஜா சுஹால்தேவை பற்றி இன்று மிகக்குறைவாகவே அறியப்படுகிறது. அவர் உத்தரபிரதேசத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ராஸ்வதியின் பாசி சமூகத்தை சேர்ந்தவர். ராஜா சுஹால்தேவ் 1034 இல் பஹ்ரைச் போரில் காஜி சலார் மசூத்தை தோற்கடித்து கொன்றார் என்பது பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

மேலும் இவர் 11ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளராக இருந்தார் என்றும், 1027 முதல் 1077 வரை அந்தப் பகுதியை ஆண்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக பஹ்ரைச்சின் ராஜா சலார் மசூத்தை எதிர்த்து போராடுவதற்காக இந்துக்களின் கூட்டமைப்பை அமைத்திருந்தார். ஆனால் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அவர்களை தோற்கடித்து விட்டனர். காஸ்னியில் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர் மஹ்முத்தின் மருமகன் காஜி சலார் மசூத் ஆவார். மசூத் முல்தான், டெல்லி, மீரட் ஆகியவற்றை கைப்பற்றி முன்னேறினார். மேலும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியதோடு மடங்கள் மற்றும் இந்து கோவில்களை அழிதார். ஆனால் ராஜா சுஹால்தேவ் மேலும் முன்னேறி செல்வதை தடுத்து நிறுத்தினார்.

பல மன்னர்களை மசூத் தோற்கடித்த பிறகு மீரட்,படாயூன் போன்ற சில மன்னர்கள் அவரது வலிமை மிக்க இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக நட்பு கொள்ள முடிவு செய்தனர்.இந்த இடங்களை கைப்பற்றிய பின்னர் இந்துக்களுக்கான புனித நகரமான அயோத்தியை ஆக்கிரமிக்க மசூத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் ராஜா சுஹல்தேவ் மசூத் திட்டங்களை அறிந்தார்.மேலும் அவர் எதிர் தாக்குதலை தயாரித்தார். அவர் அண்டை மாநிலங்களின் மன்னர்களுடன் பேசினார். பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய பாதுகாப்பு படையை உருவாக்கினார்கள்.

ராஜா சுஹால்தேவின் ராணுவம் ஆரம்பத்தில் தோல்வியைசந்தித்தாலும் தனது வீரர்களை ஊக்கப்படுத்திய மன்னர் எதிரி படை வீரர்கள் ஒருவர் கூட உயிருடன் திரும்ப கூடாது என ஊக்கப்படுத்தினார். 1034இல் பலநாட்கள் போருக்குப் பிறகுதான் ராஜா சுஹால்தேவ் மசூத்தை சிக்க வைத்தார். பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் போரில் கொல்லப்பட்டனர். மசூத்தின் ராணுவத்தில் இருந்த 1.5 லட்சம் வீரர்கள் யாரும் உயிர் தப்பவில்லை என்று கூறப்படுகிறது. ராஜா சுஹால்தேவ் ஒரு சாதுக்களின் புரவலர் மற்றும் இந்துக்களின் புரவலர் என்று கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News