Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.!

நடிகர் சஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.!

நடிகர் சஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு சிபிஐக்கு  மாற்றப்பட்டது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 8:36 AM GMT

உயிரிழந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை பிரச்சனை சென்ற சில நாள்களாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் சினிமாவில் வாரிசுகளின் அதிகாரம், காதல் ஏமாற்றம், பண மோசடி போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என அவருடைய தந்தை கிஷோர் குமார் சிங், நடிகை கங்கனா ரணாவத், அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், இதனை மகாராஷ்டிரா அரசு மறுத்துவிட்டது.



இதன் பின்பு சுஷாந்த் சிங்-கின் சொந்த மாநிலமான பீகார் அரசு சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனைப் பற்றிய வழக்கு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பீகார் அரசின் வேண்டுகோளை ஏற்று வழக்கை சிபிஐக்கு மாறினார்.

Next Story