Kathir News
Begin typing your search above and press return to search.

பாலிவுட்டை கேள்வி கேட்டதால் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா.!

பாலிவுட்டை கேள்வி கேட்டதால் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா.!

பாலிவுட்டை கேள்வி கேட்டதால் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 2:34 AM GMT

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையை தொடர்ந்து பாலிவுடின் இருண்ட உலகம் என்று அவர் நடத்திய விவாதம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராம் கோபால் வர்மாவின் கோவத்தை தூண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பே செய்தி தொகுப்பாளர் ஒருவரை பற்றி படம் எடுக்கப்போவதாக கூறினார்.

"பாலிவுட் குறித்து அவதூராக பேசியதற்காக" அர்னாப் கோஸ்வாமி குறித்து ஒரு திரைப்படம் எடுக்க போவதாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார். மேலும் கோஸ்வாமி தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் மற்றும் தென்னிந்திய நடிகை கஸ்தூரி சங்கர் ஆகியோரை அழைத்து பாலிவுட்டில் புதிதாக வரும் நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமி, "பாலிவுட் நிறுவனம் பல குற்றவாளிகளை கொண்டுள்ளது, அது முழுக்க முழுக்க குண்டர்கள், கற்பழிப்பாளர்கள்," என்று பாலிவுட் குறித்து இவ்வளவு அவதூராக பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.



இருப்பினும் அர்னாப் எதிரான வர்மாவின் ட்விட் ஒன்றில் நிறுத்தப்படவில்லை. அர்னாப் எதிர்த்து அவரது தொடர் ட்விட்டில் பாலிவுட்டில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்து அர்னாப் பேசியதை குறிப்பிட்டிருந்தது. கடந்த 25 வருடங்களாக பாலிவுட்டில் திவ்யா பாரதி, ஜியாத் கான், ஸ்ரீதேவி மற்றும் சுஷாந்த் சிங் போன்றோர்களின் மரணம் குறித்து பேசப்பட்டிருந்தது.



நான்கு பேரின் மரணமும் வெவ்வேறு நிகழ்ந்தது என்னும் வர்மாவின் கூற்று. ஆனால் அர்னாப் அவை அனைத்து ஒன்றே பாலிவுட் என்னும் நிறுவனத்தால் நடத்தப்பெற்றது என்றார்.



பாலிவுட் எதிராக பேசிய அர்னாப் கோஸ்வாமியை எதிர்த்து ஆரவாரம் செய்த ராம் கோபால் வர்மா, இயக்குனர், படத்தொகுப்பாளர்கள், கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட் மற்றும் பாலிவுட் பிரபலங்களை அர்னாப் கோஸ்வாமியை எதிர்த்து பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

ஏன் அர்னாப் கோஸ்வாமியை எதிர்க்க பயம் கொள்கிறீர்கள் என்று கரண்ஜோஹா, மகேஷ் பட், சல்மான் கான் ஆகியோர் பயந்து ஒழிந்து கொண்டீர்களா என்று வர்மா கடுமையாக ட்விட் செய்துள்ளார்.



நாட்டில் தொலைக்காட்சி பார்வையாளர்களை தீமைக்கு ஒப்பிட்டு, "சில தீமைகள் வெற்றி பெற, சில நல்ல மனிதர்கள் அமைதிக்காக்க வேண்டும்," என்று வர்மா மேற்கோள்காட்டி கூறி பின்னர் அர்னாப் கோஸ்வாமி எதிராக பாலிவுட் பிரபலங்கள் அமைதி காப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.



அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பாலிவுட்டின் செயலற்ற தன்மையால், வர்மா தொகுப்பாளரை குறித்து ஒரு படம் எடுக்க போவதாகவும் அதில் "அவருடைய உடையை அகற்றி நிர்வாணத்தில் இருப்பது போன்று" சித்தரிக்க போவதாகவும் ஊழல் குறித்தும் இருக்குமென்று தெரிவித்துள்ளார்.



"என்னுடைய படத்திற்கு "அர்னாப் தி நியூஸ் பிராஸ்டிடூட்" என்று பெயரிடலாம் என்றிருந்தேன். அவரை குறித்து முழுமையாக படித்தபின்னர் தி நியூஸ் பிம்ப் அல்லது தி நியூஸ் பிராஸ்டிடூட் என்று முணுமுணுத்துக் கொண்டேன்," என்றும் வர்மா தெரிவித்துள்ளார்.



source: https://www.opindia.com/2020/08/ram-gopal-varma-meltdown-announces-a-movie-on-arnab-goswami-the-news-prostitute/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News