Kathir News
Begin typing your search above and press return to search.

நயன்தாராவின் பிளாக்பஸ்டர் படங்கள் கன்னடத்தில் ரீமேக்.!

நயன்தாராவின் பிளாக்பஸ்டர் படங்கள் கன்னடத்தில் ரீமேக்.!

நயன்தாராவின் பிளாக்பஸ்டர் படங்கள் கன்னடத்தில் ரீமேக்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 8:38 AM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் ரசிகர் அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று இவர் கூறப்படுகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அங்கும் ரசிகர்கள் இவருக்கு அதிகம் தான்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று "கோலமாவு கோகிலா". இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார்.இந்த இயக்குனர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'டாக்டர்' என்ற படத்தில் பணிபுரிந்து வருகிறார். கோலமாவு கோகிலா என்ற படத்தில் யோகி பாபு நகைச்சுவையும், நயன்தாராவுடனான காதலும் படத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் அவர் இசையமைத்த "கல்யாண வயசு" என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.

இந்த படத்தில் கோகிலா தன் அம்மாவின் மருத்துவச் செலவிற்காக போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பது தான் இந்த படத்தின் கதையாகும். மேலும் போதை பொருள் கடத்தி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இவரும் இவர் குடும்பத்துடன் வெளியே வரும் காட்சிகள் பார்ப்போரை ரசிக்க வைப்பதாக இருக்கும்.

இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் "ரட்சிதா ராம்" நடிப்பார். 'கன்னத் கோகிலா' என்ற படத்தை இயக்கிய மயூரா ராகவேந்திர இந்த படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து பேசிய அவர் இந்தப்படம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.கொரோனா முடிந்தவுடன் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடும் முன்பு நடிகர்,நடிகை ஆகியோர்கள் பற்றி நாங்கள் கூறுவோம் என்று பதிவிட்டிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News