Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவில் இருந்து தபாலில் வரும் மர்ம விதைகள் - உயிரி ஆயுதமாக இருக்குமா.? விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை!

சீனாவில் இருந்து தபாலில் வரும் மர்ம விதைகள் - உயிரி ஆயுதமாக இருக்குமா.? விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை!

சீனாவில் இருந்து தபாலில் வரும் மர்ம விதைகள் - உயிரி ஆயுதமாக இருக்குமா.? விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 5:06 AM GMT

அமெரிக்கா மற்றும் கனடா நாட்டை சேர்ந்த மக்கள் பலருக்கு, சீனாவில் இருந்து மர்ம பார்சல் வந்துள்ளது. அவை உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை, அரசுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டை சேர்ந்த மக்கள் பலருக்கு, சீனாவில் இருந்து மர்ம பார்சல் வந்துள்ளது. பார்சலின் மேல், உள்ளே தங்கம் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை திறந்து பார்த்தால், விதைகள் அடங்கிய பாக்கெட் காணப்படுகிறது. இது குறித்து மக்களிடம் வந்த புகாரை ஆய்வு செய்த அரசு தரப்பு, அதனை மண்ணில் விதைக்க போட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்ணின் தன்மையை சீர்குலைத்து, விவசாயத்தை அழிக்க திட்டமிட்டே அனுப்பப்பட்ட உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கனடாவில், பண்ணை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கு, இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா அந்த பார்சல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால், விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளது.

Next Story