Kathir News
Begin typing your search above and press return to search.

தளபதி விஜய்க்கு செம கதை வைத்திருக்கிறாராம் பட இயக்குனர் வசந்தபாலன்.!

தளபதி விஜய்க்கு செம கதை வைத்திருக்கிறாராம் பட இயக்குனர் வசந்தபாலன்.!

தளபதி விஜய்க்கு செம கதை வைத்திருக்கிறாராம்  பட இயக்குனர் வசந்தபாலன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 6:36 AM GMT

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் அனைவரும் தளபதி விஜய் உடன் ஒரு படமாவது பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது விஜயின் வசூல் அதிக கட்டத்திற்கு எட்டி உள்ளதால் அவர் ஹிட் கொடுக்கும் படங்களை எடுக்கும் இயக்குனர்களுடன் மட்டும் நடித்துவருகிறார்.இதனால் அவருக்கு எந்த வித மார்க்கெட்டும் இழக்காமல் இருக்கிறேன் என்ற எண்ணம் இருக்கிறதோ எனவோ.

தற்போது விஜய் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த "கைதி" படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். அந்த வகையில் வெயில் படத்தின் இயக்குனர் வசந்தபாலன் விஜய்க்கு எதார்த்தமான கதை ஒன்றை வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த செய்தியை இவர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது தெரிவித்திருந்தார்.

ஜெயில் படம் வெளியான பிறகு விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் இவருக்கு வாய்ப்பளித்தால் நன்றாகத்தான் இருக்கும் பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று தற்போது இருக்கும் சூழலில் விஜய் எந்த படம் நடித்தாலும் நன்றாக தான் ஓடும் இயக்குனர் வசந்தபாலனையும் ஒரு முக்கியக் நபராக வளர்த்து விடுவாரா. ஆனால் தளபதி விஜய், இயக்குனர் வசந்த பாலனுக்கு 90% வாய்ப்பளிக்க மாட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News