Kathir News
Begin typing your search above and press return to search.

மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் தனுஷுடன் நடிக்க ஆசை.!

மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் தனுஷுடன் நடிக்க ஆசை.!

மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் தனுஷுடன் நடிக்க ஆசை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 6:31 AM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக படத்தில் தோன்றிய போது இவரெல்லாம் இந்த இன்டஸ்ட்ரியல் நிலைத்து நிற்பாரா என்ற கேள்விக்குறி வந்தது அனைவரிடமும் அதற்கு மாறாக இவர் இப்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைகிறது.இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அண்மையில் தனுஷின் பிறந்தநாளில் அடுத்து இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் கொண்டாடி வந்தனர். இவரின் பிறந்த நாள் பரிசாக கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஜகமே தந்திரம் படத்தின் பாடல் வெளியாகி இவருக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்தது.இந்தப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய பிறந்த நாளிற்கு திரையுலகமும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்தவகையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறினார்.

அவர் தனுஷ் நான் உங்களோடு பணிபுரிய ஆவலாக இருக்கிறேன் என்றும் விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்திற்கு தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் நன்றி என்றும் விரைவில் படத்தில் ஒன்றாக இணைவோம் என்று கூறியிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News