Kathir News
Begin typing your search above and press return to search.

லோகேஷ் பாபுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை - இணையத்தில் உதவி கேட்கும் குட்டி கோபி.!

லோகேஷ் பாபுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை - இணையத்தில் உதவி கேட்கும் குட்டி கோபி.!

லோகேஷ் பாபுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை - இணையத்தில் உதவி கேட்கும் குட்டி கோபி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 10:49 AM GMT

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மிகப்பெரிய மிகப் பிரபலமானவர் லோகேஷ் பாபு. இவர் பிரபலமானது அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஜய் சேதுபதியின் இணைந்து நானும் ரவுடிதான் என்ற படத்தில் ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் நடித்திருப்பார். இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது நண்பரும் நடிகருமான குட்டி கோபி என்பவர் இணையத்தில் இவருக்கு உதவுமாறு பதிவிட்டிருந்தார் மேலும் அந்த பதிவில் இவரது அறுவை சிகிச்சைக்கு ஏழு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் அவருக்கு பல பேர் உதவி செய்ததில் அவருக்கு அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. இதன்மூலம் முதல்கட்ட அறுவைசிகிச்சை நன்றாக முடிந்தது. அதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் பார்த்தும் உதவினார். இந்நிலையில் லோகேஷ் பாபுக்கு 2ம் கட்ட அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் அதற்கு ஆறு லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். மீண்டும் நண்பர்கள் உதவி செய்யுமாறு குட்டி கோபி இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.அவர் சிகிச்சை முடிந்ததும் சிகிச்சை பெற்றதற்கான ரசீதை வேண்டுமாலும் காட்டுகிறோம் என்று அவர் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News