Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டிஸ்கர் : ரக்ஷாபந்தன் பரிசாக சரணடைந்த நக்ஸல் பயங்கரவாதி - வியப்பை ஏற்படுத்திய சகோதர - சகோதரியின் பாசம்.!

சட்டிஸ்கர் : ரக்ஷாபந்தன் பரிசாக சரணடைந்த நக்ஸல் பயங்கரவாதி - வியப்பை ஏற்படுத்திய சகோதர - சகோதரியின் பாசம்.!

சட்டிஸ்கர் : ரக்ஷாபந்தன் பரிசாக சரணடைந்த நக்ஸல் பயங்கரவாதி - வியப்பை ஏற்படுத்திய சகோதர - சகோதரியின் பாசம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 10:42 AM GMT

சனிக்கிழமை சட்டீஸ்கரின் டன்டேவாடாவில் ஒரு நக்சல் பயங்கரவாதி தனது ஆயுதங்களை கொடுத்து விட்டு பாதுகாப்பு அமைப்புகளிடம்‌ சரணடைந்தார்.

சட்டிஸ்கர்: ரக்ஷாபந்தன் பரிசாக ஆயுதங்களைக் கீழே போட்ட நக்சலைட் தீவிரவாதி.!

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 1) சட்டீஸ்கரின் டன்டேவாடாவில் ஒரு நக்சல் பயங்கரவாதி தனது ஆயுதங்களைக் கீழே போட்டு போலீசில் சரணடைந்தார்.

தகவல்களின் படி, நக்சலைட் தீவிரவாதியின் சகோதரி தனது சகோதரனைப் காவல்துறையில் சரணடைந்து, வெகுஜன வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார். பிறகு தானே SP க்கு தொலைபேசி வாயிலாக, தன் சகோதரர் வீடு திரும்பியுள்ளதாகவும், இனிமேல் எந்த தவறும் செய்யாமல் தன்னுடன் வீட்டில் இருப்பார் என்று உறுதியாக கூறினார்.

பிடித்துக் கொடுப்பவருக்கு எட்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நக்ஸலைட் மல்லா தமோ தனது மாமாவைச் சந்திக்க 14 ஆண்டுகளுக்கு முன்பு பிஜாபூரின் டோடி டும்னருக்குச் சென்றார். அங்குள்ள நக்சல்களின் 13ஆவது படை பிரிவில் சேர்ந்து பிறகு அந்தப் படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டு வந்தார். பல ஆயுதங்களை எவ்வாறு இயக்குவது என்பதைக் கற்றுக் தெரிந்திருக்கிறார்.

தமோவின் சகோதரி தனது கணவருடன் கராலியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தார். தனது வேண்டுகோளின் பேரில் வெகுஜன வாழ்க்கையில் நக்ஸ்லைட் தமோ சேர விரும்புவதாக கூறினார். அவர் ஏற்கனவே SP க்கு தொலைபேசியில் இதைத் தெரிவித்திருந்தார்.

தமோ சரணடைய வருவதைப் பற்றி அறிந்த பின்னர் காவல்துறை அதிகாரிகள் கராலியை அடைந்தனர். தமோவின் சகோதரி தனது அறிக்கையில், தமோ தன்னை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்க வந்ததாகவும், தமோவிடம் தனக்கு ரக்ஷாபந்தன் பரிசாக சரணடையும்படி வேண்டியதாகவும் தெரிவித்தார். இதற்கு தமோ ஒத்துக்கொண்டார்.

அங்கு SP டாக்டர் அபிஷேக் பல்லவ் மற்றும் DIG (CRPF) வினய் குமார் சிங் முன்னிலையில் தமோ சரணடைந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News