Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பகவான் ராமரின் படத்தை பகிர்ந்த அமைச்சர் - இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமா?

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பகவான் ராமரின் படத்தை பகிர்ந்த அமைச்சர் - இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமா?

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பகவான் ராமரின் படத்தை பகிர்ந்த அமைச்சர் - இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 7:02 AM GMT

மத்திய சட்ட அமைச்சர் RS பிரசாத் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரால் எழுதப்பட்ட மூல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பகவான் ராமரின் ஓவியத்தை பகிர்ந்துகொண்டார்.

இந்த பதிவில் இலங்கையில் ராவணனைக் கொன்ற பின்னர் ராமர்,மாதா சீதா மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் அயோத்திக்குத் திரும்புவதை விவரிக்கும் ஒரு ஓவியம் இந்திய அரசியலமைப்பில் வரையப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தப் படம் அடிப்படை உரிமை தொடர்பான அத்தியாயத்தின் தொடக்கத்தில் தோன்றும் என்றும் "இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் " என்று தனது ட்விட்டில் கூறியுள்ளார்.

ராமரின் பிறப்பிடமான அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு சில மணி நேரத்திற்கு முன் இந்த ட்விட் பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவர் இறுதியாக ராவணனை தோற்கடித்து திரும்பினார். முகலாயர்களால் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கோவிலை மீட்டெடுப்பதற்கான இந்துக்களின் 500 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாக இந்த கோவில் விளங்குகிறது.

மேலும் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் தயாரித்த அரசியலமைப்பின் முன்னுரை அவர் எழுதியதை போன்றே பழைய வடிவத்திற்கு மாற்றப்பட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட சில நாட்களில் இந்த ட்விட் வந்துள்ளது. 1976ஆம் ஆண்டில் இந்திய பிரதமரான இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்த போது 'சோசலிஸ்ட்', பொதுவுடைமை மற்றும் 'செக்யூலர்', மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு முன்னுரை திருத்தப்பட்டது.

இந்திராகாந்தி மாற்றியமைத்த டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த முதல் அரசியலமைப்பில் 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு இடையில் பா.ஜ.க ஆளும் அரசாங்கம் மொத்தம் 20 திருத்தங்களை செய்துள்ளது. இருப்பினும் சுதந்திர இந்திய வரலாற்றில் மிக நீண்டகால திருத்தம் இந்திராகாந்தி தவிர வேறுயாராலும் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சியினர் சிறையில் இருந்தபோது அவசர காலத்தில் கடுமையான விதிகளின் கீழ் 42-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News