Kathir News
Begin typing your search above and press return to search.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.?

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.?

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியின் மீது பண மோசடி வழக்கு - தனது விதிகளையே மீறுகிறதா அமலாக்கத்துறை.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:30 PM GMT

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒரு திருப்பு முனையாக அமலாக்க துறை, பண மோசடி வழக்கையும் பதிவு செய்தது. மறைந்த நடிகரின் காதலி ரியா சக்கரவர்த்தி மீது பீகார் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதைப் பற்றி சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த NDTV பத்திரிக்கையாளர் அரவிந்த் குணசேகர் கூறியதாவது, "இரண்டு தனி நபர்களுக்கு இடைப்பட்ட விஷயத்தில், அமலாக்க துறை தன்வழிகாட்டுதலுக்கு எதிராக" நடப்பதாக கூறினார். அமலாக்கத்துறை பொது பணம் சம்பந்தப்பட்ட வழக்கை தான் எடுத்துக் கொள்ளும் எனவும் கூறினார்.

பத்திரிக்கையாளர் கார்கி ராவத் , ரியா சக்கரவர்த்தியை துன்புறுத்த அமலாக்க இயக்குநரகம் அதன் விதிகளை மீறுவதாக கூறினார். "எவரேனும் துன்புறுத்தப்படும் போது விதிகள் தேவையில்லை" எனக் கூறினார்.

தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பண ரீதியான பிரச்சினைகளை பற்றி விசாரிக்க ஏஜென்சிக்கு அதிகாரம் இருக்கின்றது. பண மோசடி பற்றி விசாரிக்க அமலாக்க துறைக்கு முழுமையான உரிமை உள்ளது. அன்னிய செலாவணி மேலாண்மை திட்டம் 1999(FEMA), மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002இன் படி அமலாக்கத்துறைக்கு விசாரணையை மேற்கொள்ள உரிமை உள்ளது. NDTV பத்திரிக்கையாளர்கள் அமலாக்க துறை பற்றி பொய்யான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர்.

அமலாக்க துறை பணமதிப்பிழப்பு வழக்கையும் பதிவு செய்ய அதிகாரத்தை பெற்றுள்ளது.

நடிகர் சுஷந்த் சிங் தந்தை கூறியதாவது,

தனது மகனின் காதலியான ரியா சக்கரவர்த்தி ₹ 15 கோடி ரூபாய் நடிகர் சுஷாந்திடமிருந்து திருடியதாக புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ், பணம் முறைகேடு பற்றி முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கை, அமலாக்க தகவல் வழக்கு அறிக்கையாக, E.C.I.R, பதிவு செய்யும்படியும் அமலாக்கத் துறைக்கு வலியுறுத்தினார். நடிகர் சுஷாந்தின் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டதாக பண மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. அமலாக்கத் துறைக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில், ECIR யை பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை K.K. சிங் கொடுத்த புகாரின் பேரில் தனது மகனின் காதலி, ரியா சக்கரவர்த்தி மேல்

பீகார் அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கு பிரிவு 341, 342, 380, 420, 406, 306 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரியா சக்கரவர்த்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டி காரணமாக இருந்ததாகவும் வழக்கு பதிவாகி உள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ச்சி தனிநபர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News