Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று உதயம்.!

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று உதயம்.!

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று உதயம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 10:57 AM GMT

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக ஆயிரத்திற்கு(1000) மேற்பட்டோர் உள்ளனர்.விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது என கூறுகின்றனர். இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் படம் தயாரிப்பவர்கள் 100 பேர் தான் இருக்கிறார்கள் என்றும் மீதி அனைவருமே நடிகர்,படம் எடுப்பவர்கள் என ஆகியோர் இருக்கின்றனர்.ஆனால் தற்போது பட தயாரிப்பில் இருந்து ஒதுக்கி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கின்றன.

இதனால் படம் தயாரிப்பவர்களுக்கு தனியாக ஒரு சங்கம் உருவாக்க வேண்டும் என்று பாரதிராஜா முன்பதாகவே அறிவித்திருந்தார். அதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றொரு சங்கத்தை புதிதாக பாரதிராஜா ஆரம்பிக்க உள்ளதாக இவர் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக இந்நிலையில் மற்றொரு சங்கம் அவசியமாகிறது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் முதல் சங்கத்தை உடைக்கவில்லை என்றும் பிரித்தெடுக்கவும் இல்லை, அந்தச் சங்கத்தில் இருந்து விலகியவர்களுக்கு மற்றொரு சங்கம் உருவாக்குவதாக இவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

Next Story