Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம்.!

பாகிஸ்தான் படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம்.!

பாகிஸ்தான் படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 6:29 AM GMT

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படை வீரர்கள் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். இந்தத் தாக்குதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள லாகோட் செக்டார் பகுதியில் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் அங்கு கண்காணிப்பு வேலையில் இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். இதனால் ராணுவம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை தான் பாகிஸ்தான் படை வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தில் சுமை தூக்குவோர் (Army porter) ஆக வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இந்த பதற்றம் தணிவதற்கு முன்பே மீண்டும் பாகிஸ்தான் படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இந்த தாக்குதல் மூலம் இந்த வாரத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

Next Story