என் வாழ்கை வரலாறு படமாக்கப்படுகிறதா ? ஓ ! இவர் தான் நடிக்கிறாரா ?
என் வாழ்கை வரலாறு படமாக்கப்படுகிறதா ? ஓ ! இவர் தான் நடிக்கிறாரா ?

கிரிக்கெட் ரசிகர்கள் எவறும் மறக்க முடியாத ஒரு பெயர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டு துவக்கத்தில் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்திய கிரிக்கெடுலகில் நுழைந்து, 2007ம் ஆண்டு இந்திய அணி வென்ற T20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இந்திய அணி வென்ற 50 ஓவர் உலக் கோப்பையில் பெரும் பங்காற்றிவர் யுவராஜ் சிங்.
கடந்த சில வருடங்களாக விளையாட்டு வீரர்களின் 'பயோபிக்' என கூறப்படும் வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் யுவராஜ் சிங் வாழ்க்கை படமாக்கப்பட்டால் அவரது வேடத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் ஓர் விழாவில் கேள்வி எழுப்பப்பட்டத்து. அதற்கு பதிலளித்த அவர் பாலிவுட் நடிகரான சித்தாந்த் சதுர்வேதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பதிலளித்துள்ளர். சித்தாந்த் சதுர்வேதி 'கல்லி பாய்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர்.