என்.எல்.சி. இந்தியா இயக்குநருடன் பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை குறித்து கலந்தாய்வு !
என்.எல்.சி. இந்தியா இயக்குநருடன் பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை குறித்து கலந்தாய்வு !

என்.எல்.சி. இந்தியா இயக்குநருடன் பா.ம.க நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை குறித்து கலந்தாய்வு செய்தனர்.
அண்மையில் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. வேலை நிறுத்தம் போராட்டம் ஏதுமின்றி சுமூக முறையில் முடிவடைந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர், ஒப்பந்த பாட்டாளி தொழிற்சங்கத்தினர் பா.ம.க. சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர்.கோவிந்தசாமி தலைமையில் என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார், மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
இதில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில மகளிரணி செயலாளர் டாக்டர்.தமிழரசி, மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார், சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து முன்னாள் ஊராட்சி தலைவர் கோ.ஜெகன், மாநில செயற்குழு உறுப்பினரும், அம்மேரி ஒன்றிய கவுன்சிலருமான சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர்கள் காசி.நெடுஞ்செழியன், கார்த்திகேயன், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் காசிலிங்கம், என்எல்சி பாட்டாளி தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் திலகர், பொருளாளர் ஆறுமுகம், அலுவலகச்செயலாளர் வைத்தியநாதன், பாட்டாளி ஒப்பந்த சங்க தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளலர் முருகவேல், பொருளாளர் குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது ஒப்பந்த தொழிலாளர் ஊதிய உயர்வு விவகாரத்தில் சுமூக உடன்பாடு ஏற்படுத்திய என்எல்சி நிர்வாகத்துக்கு பாமக சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பணிநிரந்தர விவகாரத்தில் பணி ஓய்வில் 60 சதவிகிதம் என்பதை உயர்த்த வேண்டும் எனவும், அதிலும் உச்சநீதி மன்றத்தில் நிர்வாகம் ஒத்துக்கொண்டதன் உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வீடு, நிலம் ெகாடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் வாயிலாக கூடுதல் நிதியை என்எல்சியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக வடக்குத்து ஊராட்சி தலைவர் கோ.ஜெகன், நிலத்தடி நீர் குறித்தும், சுரங்க வெடியினால் ஆழ்துளை கிணறு ேமாட்டார் பம்புகள் சேதமடைவது குறித்தும் என்எல்சி தலைவர் ராகேஷ்குமாரிடம் சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தினார்