Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள்

பா.ஜ.க. வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள்

பா.ஜ.க. வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 March 2020 7:16 PM IST

மத்திய பிரதேசத்தின் காங்கிரசில் இருந்து விலகிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கமல்நாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்,இன்று தலைநகர் டெல்லி வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வீட்டுக்கு சென்று, தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News