டில்லி ஷாஹீன் பாக்கில் போராட்ட கூடாரம் காலியானது: யார் தூண்டினாலும் வீட்டை விட்டு வெளியே வர பெண்கள் மறுப்பு!
டில்லி ஷாஹீன் பாக்கில் போராட்ட கூடாரம் காலியானது: யார் தூண்டினாலும் வீட்டை விட்டு வெளியே வர பெண்கள் மறுப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக்கில் பெண்கள் பங்கேற்கும் போராட்டம் நடந்து வந்தது. 3 மாதங்களாக நடந்து வந்த இந்த போராட்டம், மற்ற பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாக வந்த புகாரை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் பேச்சு நடத்த, உச்சநீதிமன்றத்தால் சமரசக் குழு நியமிக்கப்பட்டது.
சமரச குழுவில் இடம்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி வந்தனர். அதே சமயம் இது ஒரு தேவையற்ற போராட்டம் என்கிற எண்ணமும் இப்போது போராட்டங்களில் பங்கேற்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில அமைப்புகளுக்கு கட்டுப்பட்டே அவர்கள் வேண்டா வெறுப்பாக பங்கேற்கிறார்கள் என செய்திகள் வந்தன.
இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டில்லியில் உடற்பயிற்சி கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்கள், அரசு உத்தரவின்படி மூடப்பட்டு வருகின்றன. 50 பேருக்கு மேல் மக்கள் ஒன்று கூடவும், மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறித்த பதற்றம் நாடு முழுவதும் தொற்றிக் கொண்டது. தலை நகர் டெல்லியில் பதற்றம் இன்னும் அதிகமாகி வருவதால் முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே வருவதை நிறுத்திக் கொண்டனர். நேற்று முன்தினமே கூட்டம் குறைந்தது.
வந்தவர்கள் கொரோனா தொற்று எச்சரிக்கையால் அதிக இடைவெளி விட்டு, வாயை, மூக்கை துணியால் மூடிக் கொண்டு அமர்ந்தனர். ஆனால் நேற்று வந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும்,யார் தூண்டினாலும் இப்போது அவர்களின் பேச்சைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை.வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. இதனால் கூடாரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.