அன்றே சதி வேலையில் இறங்கிய சீனா - கொரோனா வைரஸ்சிடமிருந்து எப்படி பிரதமர் மோடி நம்மை காப்பாற்றினார்? அம்பலமான ஆதாரம்!
அன்றே சதி வேலையில் இறங்கிய சீனா - கொரோனா வைரஸ்சிடமிருந்து எப்படி பிரதமர் மோடி நம்மை காப்பாற்றினார்? அம்பலமான ஆதாரம்!

இத்தாலி போல ஐரோப்பா போல அமெரிக்கா போல ஏன் இந்தியாவிலே வைரஸ் பரவவில்லை. என்ன காரணம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வரை ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
காரணம் பிரதமர் மோடி சீனாவை நம்பவில்லை. டிசம்பரிலே வைரஸ் பரவ ஆரம்பித்தவுடனே சீனா உலகுக்கு சொன்னது, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது. இதை நம்பிய உலக சுகாதார நிறுவனமும் அதையே எல்லோருக்கும் சொல்லிவிட்டது.
இதில் உள்ள விபரீதத்தை புரிந்துகொண்ட இந்தியா, ஜனவரி மாதமே சீனாவிலே இருந்து வரும் நேரடி விமானங்களை தடை செய்தது. சீனர்களுக்கு கொடுக்கப்பட்ட விசா எல்லாம் ரத்து செய்யப்பட்டது.
இங்கே மோடி இப்படி வேலை செஞ்சுட்டு இருக்கும்போது அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் நேரடி விமானங்களை அனுமதித்தது. விளைவு ஆயிரக்கணக்கிலே இறப்பு, லட்சக்கணக்கிலே தொற்று நோய்.
இன்னைக்கு எல்லா நாடுகளும் மோடி மாதிரி சீனாவிலே இருந்தும் விமானங்களை தடை பண்ணியிருந்தா இப்போ இவ்வளவு பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க
சீனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனா செய்த பயலாஜிக்கல் ஆயுதம் வெளியே வந்ததா அல்லது ஆராய்ச்சி செய்யும் போது ஏதேனும் கவனக்குறைவால் வெளியேறியதா என இன்னும் முழுமையாக தெரியவில்லை.