'ஏ' ரத்தம் உள்ளவர்களை எளிதில் கொரோனா தாக்கும்.. சீனா ஆராய்ச்சியில் புதிய தகவல்.!
'ஏ' ரத்தம் உள்ளவர்களை எளிதில் கொரோனா தாக்கும்.. சீனா ஆராய்ச்சியில் புதிய தகவல்.!

சீனாவில் வுகானில் உள்ள ஷோங்னான் மருத்துவமனையில் கொரோனா பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை வைத்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அவர்கள் சாப்பிட்ட உணவு வகைகள், அன்றாட பணிகள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
'ஏ' பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய ரத்த வகையை சேர்ந்தவர்களையே இந்த வைரஸ் அதிகளவு தாக்கியுள்ளது.
'ஓ' பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஓபி நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களை குறைவாகவே தாக்கியுள்ளது.
ஓ வகை ரத்தம் உள்ளவர்களை இந்நோய் தாக்காது என்று நினைக்காதீர்கள். அவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படுகிறது.
ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் சார்ஸ் நோய் வந்தபோதும் ஏ வகை ரத்தம் கொண்டவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.