Begin typing your search above and press return to search.
வாகனங்கள் அணிவகுத்து நின்றால் டோல்கேட் வசூலிக்கக்கூடாது.. தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உத்தரவு.!
வாகனங்கள் அணிவகுத்து நின்றால் டோல்கேட் வசூலிக்கக்கூடாது.. தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உத்தரவு.!

By :
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் எல்லைகளை சீல் வைத்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று கொண்டிருப்பதால் டோல்கேட்டில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிறது.
இதன் காரணமாக மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதில் யாராவது கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் இருந்தால் அருகில் இருப்பவர்களுக்கு பரவ நேரிடும்.
இதனை கருத்தில்கொண்டுதான் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகமானால் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மிக எளிதில் டோல்கேட்டை கடக்க முடியும்.
Next Story