Kathir News
Begin typing your search above and press return to search.

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 March 2020 4:16 PM IST

பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை வெற்றிகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா.

பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவரும்கூட.

நியு யார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற ஜெராடா, லண்டனுக்குத் திரும்பியபோது கரோனா நோய்த் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

நோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார்.

கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் மற்றும் சளியால் மார்பு வலி எல்லாமும் கிளாருக்கு இருந்தது.

ஆனால், டாக்டர் கிளார் ஜெராடா இப்போது நோய்த் தாக்குதலிலிருந்து மீண்டுவிட்டார். முதியவர்களாக இருந்தாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட பெரும்பாலானவர்களால் நிச்சயமாக நலம் பெற முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் கிளார்


நான் முற்றிலுமாக சத்தை இழந்துவிட்டேன். என் முன்னால் தரையில் கிடக்கும் 50 பவுண்ட் தாளைக்கூட குனிந்து என்னால் எடுக்க முடியாத அளவில் என்னுடைய உடல்நிலை இருந்தது.

"நோயின் பாதிப்பு என்னை அப்படியே அடித்துப் போட்டுவிட்டது, ஆனால், நான் ஒருபோதும் என் உயிருக்கு ஆபத்து, பிழைக்க முடியாது என்று நினைக்கவேயில்லை.

"நோய்த் தொற்றுக்கு எதிராக எந்த அளவுக்குப் போராட முடியுமோ அந்த அளவுக்கு என்னுடைய உடல் போராடியது.

"ஏன் மக்கள் இந்த அளவுக்குக் கவலைப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பெரும்பாலானவர்கள் என்னைப் போல நிச்சயம் நலம் பெற்றுவிட முடியும். இதுவொன்றும் விதிக்கப்பட்ட மரண தண்டனை அல்ல."

தன்னுடைய கணவரான ராயல் மனநல மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவரான சர் சைமன் வெஸ்லி, கால்பந்தாட்டத்தின்போது சுற்றிக்கொள்ளும் துணி மூலம் முகத்தைச் சுற்றித் தன்னைக் காத்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார் கிளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News