Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் நியமனத்தால் தி.மு.க விற்கு ஏற்பட்டிருக்கும் நிர்பந்தம் ! பொதுச்செயலாளர் ஆவாரா ஆ.ராசா ?

பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் நியமனத்தால் தி.மு.க விற்கு ஏற்பட்டிருக்கும் நிர்பந்தம் ! பொதுச்செயலாளர் ஆவாரா ஆ.ராசா ?

பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் நியமனத்தால் தி.மு.க விற்கு ஏற்பட்டிருக்கும் நிர்பந்தம் ! பொதுச்செயலாளர் ஆவாரா ஆ.ராசா ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 March 2020 2:26 PM IST

தமிழக பா.ஜ.க. வின் தலைவராக திரு. முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார், இவர் தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் ஆவார் .

தமிழக பா.ஜ.க. விற்கு இது புதியது கிடையாது, இதற்கு முன்னரும் தாழ்த்தப்பட்டவர்களை தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறது. சமுக நீதியை வெறும் கோஷமாக இல்லாமல் அதை செயலில், தன் கட்சியிலேயே துவங்கியது பா.ஜ.க. தான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இதற்கு முன்னரும் பல்வேறு மாநில தலைமை பதவிகளிலும், தேசிய தலைமை பதவிகளிலும் சமுக நீதியை நிலைநாட்டிய ஒரு கட்சி என்ற பெருமை பா.ஜ.க. விற்கு உண்டு.

தமிழக பா.ஜ.க. தலைவராக தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவரை அமர்த்தி சமுக நீதியை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது பா.ஜ.க. வின் தேசிய தலைமை. ஆனால் சமுக நீதிக்காக குரல் கொடுக்கும் தி.மு.க. வின் பிராதான பதவிகள் எல்லாம் கருணாநிதியின் குடும்ப வாரிசுகளுக்கே கொடுக்கப்பட்டு வந்தது அல்லது கருணாநிதியின் பேச்சை எதிர்த்து பேசாத அடிமை உடன் பிறப்புகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

தலைமையை விமர்சித்ததால் அவரின் மகனான அழகிரியை கூட கட்சியை விட்டு நீக்கி தன் இளைய மகனுக்கான (ஸ்டாலின்) வழியை சரி செய்து கொடுத்தவர் தான் கருணாநிதி. ஸ்டாலினின் அருகில், ஸ்டாலினை எதிர்த்து பேசாதவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் சாதியின் அடிப்படையிலேயே பதவிகள் வழங்கபடும் என்பது தி.மு.க. வின் ஓட்டு அரசியலின் எழுதபடாத விதி என்பது பலருக்கு தெரிந்த விசயமே.

இந்நிலையில் இதையெல்லாம் வைத்தே சமுக வலைத் தளங்களில் தி.மு.க. விற்கு எதிரான பல குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன, சமுக நீதி என்று பேசி தாழ்த்தபட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு பின்னர் அவர்களை அடிமை போல நடத்துவது தான் அவர்களின் பாணி எனவும், இது தி.மு.க. விற்கு புதியது அல்ல என்றும் பேசி வருகின்றனர்.

சமிபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய தி.மு.க. வின் அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தபட்டவர்கள் உயர் பதவிகளில் அமர்வது எல்லாம் தி.மு.க. போட்ட பிச்சை என்று கேவலமான முறையில் பேசியிருந்தார். இதனால் அவரின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பெயரில் வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தி.மு.க. வின் மீது தாழ்த்தப்பட்ட சமூகம் ஒரு பெருங்கோபத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கான குரலாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் திருமாவளவன் அவர்கள் கூட இதனை பெரிய அளவில் கண்டிக்காமல் பதவி சுகத்திற்காக மென்மையாக கடந்து சென்றது அவர் கட்சியினர் மத்தியிலேயே பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிபிடத்தக்கது.

தற்போது திமுகவின் பொது செயலாளர் திரு. அன்பழகன் அவர்களின் மறைவையொட்டி புதிய பொதுச் செயலாளரை நியமிக்கும் பணியில் தி.மு.க. இறங்கியுள்ளது.

பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் பதவியில் தாழ்த்தபட்ட சமுகத்தை சார்ந்தவரை அமர்த்தியிருப்பதினாலும், ஆர்.எஸ். பாரதியின் கீழான பேச்சு தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தி, அதனால் அவர்களின் மத்தியில் தி.மு.க. வின் செல்வாக்கு குறைந்திருப்பதன் காரணமாகவும் தி.மு.க. விற்கு பெரிய நிர்பந்தமும், சங்கடமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தி.மு.க. வின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ஒருவரை பதவியில் அமர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தி.மு.க. தள்ளப்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் தி.மு.க. வின் பொதுச் செயலாளர் பொறுப்பு ஆ. ராசாவுக்கு வழங்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஆனால் முடிவு துர்கா ஸ்டாலின் அவர்களின் கையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. துர்கா ஸ்டாலின் அவர்கள் அவர் சமுகத்தை சார்ந்தவரை அப்பதவியில் அமர வைக்க பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் ஸ்டாலினின் மருமகன் திரு.சபரீசனும் லாபி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க. இதிலாவது சமுக நீதியை நிலைநாட்டுமா இல்லை அவர்களின் குடும்ப அரசியலில்தான் குப்பை கொட்டுமா என காண தொண்டர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். எது எப்படியோ ஒரு வேளை ஆ. ராசாவிற்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கபட்டால் அவர் முதலில் நன்றி சொல்ல வேண்டியது பா.ஜ.க. விற்கு தான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News