நம் இலங்கை தமிழர்களை துரத்தும் கொரோனா.. தமிழர்கள் பகுதி முற்றிலுமாக முடக்கம்..
நம் இலங்கை தமிழர்களை துரத்தும் கொரோனா.. தமிழர்கள் பகுதி முற்றிலுமாக முடக்கம்..

இலங்கையிலும் அங்கு வந்து செல்லும் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் நபர்கள் மூலம் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை தொற்று இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 3063 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 245 பேர் நாடு பூராகவும் உள்ள 18 மருத்துவ மனைகளில் கண்காணிப்பில் உள்ளதாக அந்த நாட்டின் நோய் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர் 31 பேர் அறிகுறிகளுடன் காணப்பட்டதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், அமலில் உள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் நாளை செவ்வாய் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அதேவேளை, வடக்கின் 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்தவர்கள் மற்றும் அவரது போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.