கொரோனா நோயை தீர்ப்பதாக நோயாளிகளை அழைத்து கூட்டு ஜெபம்!! நோய் மேலும் பரவியதால் இயேசு திருச்சபை மீது தென்கொரியா வழக்கு
கொரோனா நோயை தீர்ப்பதாக நோயாளிகளை அழைத்து கூட்டு ஜெபம்!! நோய் மேலும் பரவியதால் இயேசு திருச்சபை மீது தென்கொரியா வழக்கு

கொரோனா நோயை தீர்ப்பதாக நோயாளிகளை அழைத்து கூட்டு ஜெபம்!! நோய் மேலும் பரவியதால் இயேசு திருச்சபை மீது தென்கொரியா வழக்கு
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு தென்கொரியா.இங்கு 516 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அந்த நாடு சீனாவில் இருந்து வருபவர்களிடம் மிகவும் உஷாராக உள்ளது.
இந்த நிலையில் தென் கொரியாவில் உள்ள ஷிஞ்சியோன்ஜி சர்ச் ஆப் இயேசு எனப்படும் அந்த நாட்டின் பிரபல கிறிஸ்தவ திருச்சபை தலைமை பாதிரியார் லீ மேன்-ஹீ மூலம் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தாங்கள் காப்பற்றப்போவதாகக் கூறி "புதிய வானமும் பூமியும்" என்கிற பெயரில் மாபெரும் சுவிசேஷ கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
கொரோனா வைரஸ் என்கிற சாத்தானை என் ஒருவரால் தான் அழிக்கமுடியும் என லீ மேன்-ஹீகூறியதை அடுத்து நோயாளி எண். 31, 61 ஆகியோர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஜெபத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் அவர்கள் நோய் முற்றிய நிலையில் திரும்பி வந்ததாகவும் அவர்களால் மேலும் சிலருக்கு நோய் பரவியது உறுதியாகியுள்ளது. இதை அடுத்து எந்த வித பாதுகாப்பு கவசங்கள் அணிவிக்காமல் நோயை மேலும் பரப்பியதாக ஷிஞ்சியோன்ஜி சர்ச் ஆப் இயேசு முக்கிய நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமை பாதிரி லீ மேன்-ஹீ கூறுகையில் "நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் அதையெல்லாம் தடுக்க முடியவில்லை." என வெட்கத்துடன் கூறுகிறாராம்.