பிரதமர் வார்த்தை.. கிராமங்களில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கை தட்டி ஆரவாரம்.!
பிரதமர் வார்த்தை.. கிராமங்களில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கை தட்டி ஆரவாரம்.!

பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்கள், பணியாளர்களை போற்றும் வகையில் 22ம் தேதி மாலை 5 மணிக்கு அனைவரும் தங்களின் வீடுகளில் இருந்து கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்காக மருத்துவர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். அதே போன்று மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியார்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் பணிகளை திறம்பட செய்கின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
தங்களின் வீடுகளில் இருந்தனர். மேலும், தங்கள் வீடுகளில் இருந்து கை தட்டி மருத்துவ பணியாளர்களுக்கு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே போன்று பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாடி கிராமத்தில் உள்ள சிறிய குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சேர்ந்து மருத்துவர்களை மகிழ்விக்கும் வகையில் தங்களின் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.