நடக்க முடியாது.. பேச முடியாது.. வீல் சேரில் முடங்கியபோதும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு நாள்.!
நடக்க முடியாது.. பேச முடியாது.. வீல் சேரில் முடங்கியபோதும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு நாள்.!

ஸ்டீபன் ஹாக்கிங் (76) இங்கிலாந்தை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆவார். இன்றைய மார்ச் 14ம் தேதி 2018ம் ஆண்டு அமெரிக்காவில் மறைந்தார்.
குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கியிருந்தாலும் அண்டவியல், காலப்பயணம் தொடர்பாக ஆராய்சிகளை மேற்கொண்டார்.
இந்த உலகில் கடினமான அறிவியல் கண்டுபிடிப்புகளை மிக எளிமையாக சாதாரண மக்களுக்கும் புரிகின்ற வகையில் புத்தகங்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிராங்க் மற்றும் இஸபெல் ஹாக்கிங் தம்பதியினருக்கு பிறந்தவர்.
இவரது தந்தை மருத்துவத்தையும் தாய் மெய்யியல் துறையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவார்.
ஸ்டீவன் ஹாக்கிங் பைரன் ஹவுஸ் பள்ளியில் ஆரம்பத்தில் படித்தார். இதனிடையே ஸ்டீவன் தந்தை ஏழ்மையில் இருந்தாலும் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
ஆரம்பபள்ளியை விட மிகவும் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் ஸ்டீவனை சேர்க்க திட்டமிட்டார். அதற்காக அந்த பள்ளியில் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நடைபெற்றது.
அந்த தேர்வு நடைபெறும் பொழுது ஸ்டீவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. ஆகையால் அத்தேர்வை எழுதாமல் போனது.
ஸ்டீவன் எஸ்டி ஆல்பன்ஸ் பள்ளியில் படிக்க ஆரம்பித்தார்.
முதன் முதலில் படிப்பில் சிறந்து விலங்கவில்லை. பின்னால் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார் ஸ்டீவன்.
பின்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் இல்லாதபோது இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்ந்தெடுத்து படித்தார்.
இதனிடையே இயற்பியல் பட்டம் பெற்றார். 1962ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து அண்டவியல் படித்தார்.
அந்த சமயத்தில் உடல்நிலை மோசமானபோது மருத்துவரை சந்தித்தார். அப்போது ஒரு வித நரம்புச் தசை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
குணப்படுத்த முடியாத நோயாக இருந்தது. மனிதன் உடலில் உள்ள நியூரான்களை பாதிப்படைய செய்யும்.
மூளை, தண்டுவடம் ஆகியவற்றில் தசை இயக்கத்துக்கு உதவும் நரம்புச் செல்களை சிதைந்து விடும்.
ஆனாலும் மூளையின் அறிவாற்றலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இதனிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டீவனின் உடல்கள் செயல் இழக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.
தன்னுடைய நோயை அறிந்து மிகவும் மனவேதனை பட்டார். அவரால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை.
சரியாக பேச முடியாது. ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் 2 வருடங்கள் கூட உயிர் வாழ முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
தன்னுடைய மனம் தளர்ந்தாலும், அண்டவியல் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும், செயல் இழக்கும் உறுப்புகளுக்கு தானே கருவிகளை உருவாக்கி அதனை ஈடுசெய்து வந்தார். 1966ம் ஆண்டு முதுகலை பட்டமும் பெற்றார்.
ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் நாற்காலியில் நகர்ந்து செல்லும் நிலைமைக்கு வந்தபோதும் தன்னுடைய ஆராய்ச்சிகளை விடவில்லை.
1985ம் ஆண்டு நிமோனியா ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.
இதன் பின்னர் முற்றிலும் பேச்சு திறன் இல்லாமல் போய்விட்டது.
ஸ்டீபன் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்துவதற்கு அவரது மாணவர்கள் பிரத்யேகமான கணினியை உருவாக்கி கொடுத்தனர்.
இதன் பின்பு எழுதவும், பேசவும் ஸ்டீவனால் முடிந்தது. பல்வேறு புத்தங்களை எழுதினார்.
அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு ஆகும்.
கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.
எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம், அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்.
நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே.
இந்த பிரபஞ்சத்தை விட பெரியது அல்லது பழமையானது எதுவுமில்லை.
அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்.
மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது.
உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.
வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
இது போன்ற அர்த்தம் நிறைந்த கருத்துகளை நமக்கு விட்டு சென்ற பிரமிப்பூட்டிய விஞ்ஞானி- ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலியை செலுத்துவோம்.