ஈரான் நாட்டில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க கோரிக்கை, அரசு விரைகிறது !
ஈரான் நாட்டில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க கோரிக்கை, அரசு விரைகிறது !

முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டின்படி ஈரான் நாட்டில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களை குமரி மாவட்ட பாஜக மீனவர் அணி சார்பில் அதன் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு ஆனது.
அதன்படி திரு.ஜெய்சங்கர் அவர்களின் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்திக்க சென்ற போது , பிரதமரின் அவசர அழைப்பில் சந்திக்க சென்ற காரணத்தால் அவரது துறை அதிகாரியை மீனவப் பிரதிநிதிகளுடன் சந்தித்தார்கள்.
ஈரானில் நமது மீனவர்கள் இருப்பது தென் பகுதியில் என்பதால் கொராணா தொற்று பாதிப்பு அப்பகுதியில் இல்லாத காரணத்தினால் அது பாதுகாப்பானதாக உணரப்படுகிறது. மேலும் அவர்களை விமானம் மூலம் கொண்டு வர முயன்றால் தரைவழியாக தெக்ரான் வரும் போது அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாடு தெரிவிப்பதாக அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.
அவர்கள் பலநாள் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வருகிறது, எனவே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திட கேட்டுக் கொண்டோம். மேலும் விரைவில் இந்தியா கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தெரிவிப்பதாக கூறினர்.
மீனவ பிரதிநிதிகள் ஜெஸ்டாலின், ரீகன் மற்றும் சகாய வளர்மதி.