ராஜேந்திர பாலாஜி நீக்கம்.. அதிர்ச்சியில் ஹிந்துக்கள்.. கொண்டாட்டத்தில் சிறுபான்மையினர்..
ராஜேந்திர பாலாஜி நீக்கம்.. அதிர்ச்சியில் ஹிந்துக்கள்.. கொண்டாட்டத்தில் சிறுபான்மையினர்..

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்களை பற்றி வெளிப்படையாக பேசிவந்ததன் காரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை துணிவாக ஊடக சந்திப்புகளில் பேசி வந்தார், இந்நிலையில் அவரின் பேச்சிற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பொறுப்பை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா செய்தியில் மக்கள் மூழ்கி இருப்பதால் ராஜேந்திர பாலாஜி நீக்கம் எந்த எதிர்ப்பையும் கொடுக்காது என நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இது இந்துக்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. வில் உண்மையை சொன்னால் பதவிபறிப்பா என அடிமட்ட தொண்டர்கள் குமுறுகின்றனர். உண்மையை பேசியதற்கு கிடைத்த பரிசு என புலம்பி வருகின்றனர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்.