Begin typing your search above and press return to search.
அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி தொடக்கம்!
அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி தொடக்கம்!

By :
அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் நிறுவப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நேற்று தொடங்கியன. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இன்றும் பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும்.
அதன்பின்னர், புதன்கிழமை காலை தற்காலிக கோயிலில் சிலைகள் வைக்கப்படும். புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் வரை சிலைகள் தற்காலிக கோயிலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story