கொரோனா பாதிப்பு தெரிந்தும்.. திருமணம், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பு.. இறுதியாக மசூதியில் தொழுகை.. கேரளாவை கதிகலங்க வைத்த நபர்.!
கொரோனா பாதிப்பு தெரிந்தும்.. திருமணம், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பு.. இறுதியாக மசூதியில் தொழுகை.. கேரளாவை கதிகலங்க வைத்த நபர்.!

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கிட்டத்தட்ட 7 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில சுகாதாரத்துறையும், மத்திய அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உதவும் என்று கூறும் வேளையில் துபாயிலிருந்து திரும்பிய ஒருவரால் கேரள அரசு தற்போது செய்வதறியாமல் திகைத்து வருகிறது.
துபாயிலிருந்து கொரோனா தொற்றுடன் வந்த அந்த நபர் 7 நாட்கள் கேரளாவின் பல பகுதிகளுக்கும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
47வயதான அந்த நபர், மார்ச் 11ம் தேதி துபாயில் இருந்து கேரளாவில் வந்து இறங்கியுள்ளார்.
மார்ச் 11 முதல் 17ம் தேதி வரையில் அவர் 3 மாவட்டங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.
இந்த 7 நாட்களில் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் என்று பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இறுதியாக மசூதிக்கு சென்று தொழுகை செய்துள்ளார். அதன் பின்னர் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடியுள்ளதாக தெரிகிறது.
பின்னர் சொந்த ஊரில் உள்ள கிளப்களுக்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 7 நாட்களில் சுமார் 1400க்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தற்போது கேரள அரசை புரட்டிப் போட்டுள்ளது என்றே சொல்லலாம்.
அவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்பன பற்றி கேரளா அரசு தற்போது கண்காணிக்கத் துவங்கியுள்ளது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு வேளை நாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அந்த நபர் கலந்து கொண்டிருப்பாரோ என்று புலம்பும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இது போன்று சமூதாய அக்கறை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது ஒரு தனி மனிதனின் அவசியமாகும்.
இனிமேல் பொதுமக்கள் தங்கள் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.