ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள்.. எங்கே தப்பு நடந்தது..
ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள்.. எங்கே தப்பு நடந்தது..

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினர், போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார் கார்டுகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் போலீஸார், சுகாதார துறையினர், வருவாய் துறையினர் இணைந்து கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் டிஎஸ்பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் கரோனா வாகனங்களை தடுப்பு கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கார் ஒன்றை சோதித்த போது காரில் பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு போலீஸார் அவர்களை கண்டு அவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஷின்யா ஹராடா(43), நசாரு நகஜிமா(57), மற்றும் நஹுமி யமாஷிடா(40) என்ற பெண் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வந்தது தெரியவந்தது
புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மகேந்திரா சிட்டி பெங்களுர் ஹரியானா, குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மூவரையும் கியூ பிரான்ச் போலீஸாரிடம் ஓப்படைத்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா தடுப்பு சோதனையில் 3ஜப்பானியர்கள் சிக்கியதும் இந்திய ஆதார் கார்டுகள் இருந்ததும் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளிட்டனர்.