திரௌபதி படத்தை ஸ்டாலின் பார்த்துவிட்டு நாடக காதல் பற்றி கருத்து சொல்வாரா.?
திரௌபதி படத்தை ஸ்டாலின் பார்த்துவிட்டு நாடக காதல் பற்றி கருத்து சொல்வாரா.?

மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படம் வெள்ளிக்கிழமை 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த படத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஆகியோர் பார்த்தனர்.
இதன் பின்னர் நாடக காதல் எப்படி எல்லாம் அரங்கேற்றப்படுகிறது என்பது குறித்து விரிவாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனுஷ் நடித்த அசுரன் படம் கடந்த வருடம் 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியானது.
இப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பார்த்தார்.
இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன், கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறன் மற்றும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுக்கள் என்று பதிவிட்டிருந்தார். அது மட்டுமின்றி இது படம் மட்டுமல்ல பாடம் என்றார்.
அதே போன்று தற்போது வெளியாகியுள்ள திரௌபதி படத்தை ஸ்டாலின் பார்த்து விட்டு நாடக காதலால் பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அரசியல் இயக்கத்தில் இருப்பவர்கள் துணை போகின்றனர்.
இந்த படத்தை எடுத்த மோகன் ஜி, மற்றும் நடிகர்கள், ரிச்சர்ட் ரிஷி ஆகியோரை பாராட்டுவாரா. இது பற்றி வாய் திறந்து கருத்து சொன்னால் தமிழகத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.