கால மாற்றம் வாழ்க்கையையே மாற்றும்
கால மாற்றம் வாழ்க்கையையே மாற்றும்

"யாரை குறித்தும் எவற்றை குறித்தும் தீர ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவதென்பது முட்டாள்தனம்" என்பதை தன் மகன்களுக்கு உணர்த்த விரும்பிய தந்தை.. தன் நான்கு மகன்களை ஒரே பாதையில் வெவ்வேறு காலங்களில் அனுப்பினார்...
மழை காலத்தில் சென்ற மகன் சொன்னான், மரங்களெல்லாம் அழுக்காக இருந்தன, காற்றுக்கு வளைந்து நெளிந்து அதன் கோலம் அழிந்திருந்தது. மனதிற்க்கு உவப்பாகயில்லை என.
வசந்த காலத்தில் சென்ற மகன் அவனை இடைமறித்து சொன்னான், இல்லவேயில்லை தரையெங்கும் பச்சை போர்த்தி வருங்காலம் பசுமை நிறைந்ததாக இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைந்ததாய் இருந்தது என்று.
அதற்கு கோடை காலத்தில் சென்ற மகன் சொன்னான், இவன் சொல்வதும் பொய். மரங்கள் எல்லாம் இப்போதே பூத்திருந்தன. அதன் நறுமணம் லயிக்கசெய்தது. அதன் அழகு மனதை வருடிசென்றது என்ற அவன் வர்ணனைக்கு எதிர்பாக இலையுதிர் காலத்தில் சென்ற மகன் சொன்னான், மூன்று பேர் சொல்வதும் பொய். மரங்கள் அனைத்தும் முதிர்ந்து கனிந்து முழுமையடைந்திருந்தன என்று.
இதை கேட்ட தந்தை சொன்னார்...மகன்களே நீங்கள் நால்வரும் சொல்வதும் உண்மை தான். நீங்கள் நால்வரும் ஒரே காட்சியை வெவ்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறீர்கள்.
இது ஒரு சின்ன எடுத்தகாட்டு. மரமோ மனிதனோ ஒரே பார்வையில் தீர்மானிக்ககூடியவைகள் அல்ல. ஒவ்வொரு சூழலின் உச்சத்தில் மனிதன் வெவ்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். ஆனந்தம், ஆக்ரோஷம், அன்பு என்று அதன் வெளிப்பாடுகள் மாறுபடுகின்றன.
மழைகாலத்தின் குறைவான ரம்மியத்தை ஏற்க தவறினால், நாம் வசந்த காலத்தின் சாத்தியங்களை இழக்கிறோம். கோடையின் அழகை இழக்கிறோம். இலையுதிர் காலத்தின் முழுமையை முற்றிலுமாக இழக்கிறோம். இது வாழ்க்கைக்கும் பொருந்துமில்லையா?
வாழ்வின் ஏதோவொரு சூழல் நமக்கு கொடுத்த வலியை மற்றும் பற்றி கொள்ளாதீர்கள் அது மீதமிருக்கும் சுழலின் ஆனந்தத்தை வேரறுத்துவிடும். வலி கற்று தந்த பாடத்தையும் அது விட்டு சென்ற தாக்கத்தையும் மட்டும் வைத்து கொண்டு அடுத்த காலமாற்றத்துக்கு தயாராவதே வாழ்க்கை.
மகிழ்ச்சியில் இன்புறுவதும், சவால்களால் வலிமைபெறுவதும், தோல்வியில் எழுச்சிகொள்வதும் வெற்றியில் மிளிர்வதும் இயற்கை நமக்கு காலத்தின் மூலம் கற்று கொடுக்கும் பாடங்களன்றி வேறென்ன?