கம்யூனிஸ்ட் சீனாவில் துவங்கிய கரோனா, இந்தியாவில் பரவி வரும் கம்யூனிஸ்ட் மாநிலமான கேரளாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்! – அமைச்சர் விஜயபாஸ்கர்
கம்யூனிஸ்ட் சீனாவில் துவங்கிய கரோனா, இந்தியாவில் பரவி வரும் கம்யூனிஸ்ட் மாநிலமான கேரளாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

தனிமை.. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கரோனா பாதித்தவர்களிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுக்கவும் ஒரே முக்கிய வழி தனிமைதான். அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.
கரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில், சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது கரோனா.
அதற்காக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எண்ணில் அடங்காதவை. உலகில் இருந்து இந்தியா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், தூதரக அதிகாரிகள், உயர் அதிகாரிகள் நீங்கலாக அனைத்து விசாக்களையும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையல், அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது ரத்தப் பரிசோதனையில், கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பரவவில்லை என்றும், முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்ட் நாட்டில் துவங்கிய கரோனா இந்தியாவில் பரவி வரும் கம்யூனிஸ்ட் மாநிலமான கேரளாவுக்கு தமிழக மக்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.