கொரானா வைரஸ் பரவல் எதிரொலி: சுற்றுலா வெறிச்சோடிய புதுச்சேரி!
கொரானா வைரஸ் பரவல் எதிரொலி: சுற்றுலா வெறிச்சோடிய புதுச்சேரி!

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாத் தலங்களான சுண்ணாம்பாறு படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களில் பயணிகள் அதிகளவில் காணப்படுவர்.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி பொதுத்தேர்வு நடப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முற்றிலுமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
புதுச்சேரியில் எங்கும் சுற்றுலா பயணிகளை காண முடியவில்லை. புதுச்சேரியில் உள்ள பல விடுதிகள் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.