கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பீதி.. கைதானவர் பரபரப்பு தகவல்.!
கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பீதி.. கைதானவர் பரபரப்பு தகவல்.!

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு எடுத்து வருகிறது.
அதிலும் சில பேர் தமிழகத்தில் கொரோனா பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் கோழிகளையும் கொரோனா தாக்கியுள்ளது என்பது. கோழிக்கறி சாப்பிட்ட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரூரை சேர்ந்த ஆயில் மில் தொழிலாளி பெரியசாமி என்பவர் இரண்டு வாரத்துக்கு முன் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஹலோ ஆப்பில் ஒரு பதிவை போட்டார்.
இந்த பதிவை பலர் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டரில் பார்வேர்டு செய்ய ஆரம்பித்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் பீதியை அடைந்தனர். இதன் பின்னர் கோழிக்கறியை சாப்பிட முன்வரவில்லை.
இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் பெருமளவில் கோழிப்பண்ணை உள்ளது.
வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சுப்பிரமணியம் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பூபதி, கரூர் சென்று பெரியசாமி என்பவரை கைது செய்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தினமும் செல்போனில் ஏதாவது ஒரு குறுஞ்செய்தியை கிரியேட் செய்து அனுப்புவேன்.
ஹலோ ஆப்பில் தினமும் அதிமான குறுஞ்செய்தி போட்டால் அதிகளவு பணம் கிடைக்கும்.
தற்போதைய சூழல் என்பது கொரோனா வைரஸ்தான் என்று அறிந்தேன். இதனை பயன்படுத்தி கோழிகளுக்கு கொரோனா இருப்பது போன்று குறுஞ்செய்தி கிரியேட் செய்து பரப்பினேன்.
ஆனால் என்னை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் சாதாரன பிரிவின் கீழ் வழக்குப்பதிவு எச்சரித்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இவரை போன்று தமிழகத்தில் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். உறுதி செய்யப்பட்ட தகவலை பரப்பினால் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் வீண் வதந்தியை பரப்புவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பது தற்போது கொரோனா போன்ற வைரஸால் வெளியுலகத்துக்கு தெரியவருகிறது.