யுனெஸ்கோ பெயரில் போலி செய்தி பரப்பும் கம்யூனிஸ்ட் கட்சி ஊடகம் தீக்கதிர்!
யுனெஸ்கோ பெயரில் போலி செய்தி பரப்பும் கம்யூனிஸ்ட் கட்சி ஊடகம் தீக்கதிர்!

போலி செய்திகளை பரப்புவதில் முன்னனியில் இருக்கும் ஊடகம் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் தீக்கதிர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போலி செய்திகளை நித்தமும் எழுதி, பகிர்ந்து மக்கள் மத்தியில் நஞ்சை விதைப்பதை முழு நேர வேலையாக செய்து வரும் சீன கைக்கூலிகள் இவர்கள் என்றால் அது மிகையாகாது.
"சுய ஊரடங்கின் போது கை தட்டும் படி சொன்ன சமயத்தில் மக்கள் நடந்து கொண்ட விதம் தான் இந்திய வரலாற்றிலேயே படுமுட்டாள்தனமான தருணம் என்பதை அறிவிக்கிறோம்" என யுனெஸ்கோ சொன்னதாக ஒரு போலி ட்விட்டர் பக்கத்தின் போலி பதிவை மேற்கோள் காட்டியுள்ளது இவர்களின் பித்தலாட்டத்தையும், வெறுப்பு அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள போட்டோஷாப் ட்விட்டர் பக்கம் கடந்த 7 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தெரிய வருகிறது.
கொரோனா போன்ற மனித பேரழிவு நேரங்களில் கூட இப்படி போலி செய்திகளை பரப்பும் கேடுகெட்ட வேலையை செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்டு முகம் சுளிக்கின்றனர் இணையவாசிகள்.