'திரௌபதிக்கு' எதிராகவும் நாடக காதலுக்கு ஆதரவாகவும் திரை விமர்சனம் வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு தக்க பதிலடி கொடுத்த மோகன் ஜி.!
'திரௌபதிக்கு' எதிராகவும் நாடக காதலுக்கு ஆதரவாகவும் திரை விமர்சனம் வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு தக்க பதிலடி கொடுத்த மோகன் ஜி.!

மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வசூலையும் பொதுமக்களிடையே நல்ல மதிப்பையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நாடக காதலால் பல குடும்பம் சீரழிந்து உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்படுகிறது.
இதற்கு ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவன் ஆதரவாக செயல்பட்டு கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் நாடக காதலுக்கு ஆதரவான படங்களே வந்துள்ளது.
ஒரு சமூகத்திற்காக மற்ற அனைத்து சமூகத்தையும் கொச்சைப்படுத்தி படங்களை எடுத்து திரையில் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அத்தனை படத்திற்கும் ஒரே ஒரு திரௌபதி மட்டுமே வெளியானது. அனைத்து நாடக கோஷ்டிகளும் தமிழகத்தில் வாயடைத்து போயுள்ளனர்.
இந்நிலையில், திரௌபதி படம் குறித்து திரை விமர்சனம் வார நாளிதழ் ஆனந்த விகடனில் வெளி வந்தது.
அதில் தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர் தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்தரித்து முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே! திரௌபதி அறம் பேசவில்லை! என்று வெளியானது.
இதற்கு மோகன் ஜி ட்விட்டர் மூலமாக சரியான பதிலடி கொடுத்துள்ளார். இது என் படத்திற்கான மார்க் இல்லை. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்க விமர்சனத்திற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.