கோவை கொரோனா பெண்ணின் பகீர் பக்கங்கள், எந்த அறிகுறியும் இல்லை, ஸ்பெயின் நண்பர் எச்சரதித்ததால் செய்யப்பட்ட சுயபரிசோதனை!
கோவை கொரோனா பெண்ணின் பகீர் பக்கங்கள், எந்த அறிகுறியும் இல்லை, ஸ்பெயின் நண்பர் எச்சரதித்ததால் செய்யப்பட்ட சுயபரிசோதனை!

ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறிதியாகியுள்ளது கோவையை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. ஸ்பெயினில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து பிறகு, இரயிலில் கோவையை வந்தடைந்துள்ளார் இப்பெண்.
குடும்பத்தினருடன் நேரம் செலவழித்த இப்பெண்ணுக்கு ஸ்பெயினில் தன் தோழியிடமிருந்து அழைப்பு வந்து அப்பெண் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், நீயும் பரிசோதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் பரிசோதித்த இப்பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியாகவே இவர் வசித்த சாய்பாபா காலனி அடுக்குமாடி குடியிருப்பு முதல் அந்த பகுதியே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த பெண்ணுக்கு எந்த ஒரு கொரோனா அறிகுறியும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, அறிகுறி இல்லாமல் எப்படி தெரிந்துக்கொள்வது என்ற அச்சம் மக்களிடையே வலுத்து வருகிறது.