அரசு சொல்வதை கேளுங்கள்.. இல்லையெனில் உங்கள் இறப்பை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.!
அரசு சொல்வதை கேளுங்கள்.. இல்லையெனில் உங்கள் இறப்பை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
இந்த கொடிய தொற்று நோயை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றார்.
பொது இடங்களில் அதிகளவு கூட்டம் சேரக்கூடாது. தினமும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்கவும் என்று பல்வேறு அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால் யாரும் முறையாக பின்பற்றவில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் தினமும் மக்கள் கூட்டம் தெருக்களில் நாளுக்கு நாள் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
நேற்று இரவு முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடியிருந்தார்கள்.
இவர்கள் இப்படி ஏன் கூட வேண்டும். அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றால், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கிடையாது.
நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே பாதுகாப்பாக இருந்தால் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
ஆனால் அதனை விடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துக்காக முண்டியடித்து ஏறியது காண்போரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற சமயத்தில் கொரோனா தொற்று மிக எளிதில் பரவும். இதனால் யாருக்கு லாபம் சொல்லுங்கள்.
அரசு உங்களை வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என்றுதான் அறிவுறுத்தியது. ஆனால் அதனை விடுத்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றது மிகவும் ஆபத்தானது என்றே சொல்லலாம்.
தயவு செய்து வீடுகளில் தனிமையில் இருங்கள். இதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படாது. இதனை கடை பிடிக்கவில்லை எனில் உங்களது இறப்பை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
தயவு செய்து மருத்துவர்கள் சொல்வதையும், அரசு சொல்வதையும் கேட்டு முறையாக பின்பற்றுங்கள்.
தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றுவது நல்லது.
அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். தேவையில்லாத பயணங்களை தவிருங்கள்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளை சுத்தமாக வையுங்கள். குழந்தைகளை தினமும் இரண்டு வேலை குளிப்பாட்டுங்கள்.
வெளியில் சென்றுவிட்டு வந்தால் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். இது போன்றவற்றை பின்பற்றினால் கொரோனா தொற்றை விரட்டியடிக்கலாம்.